சுயேச்சைகளுக்கு தீப்பெட்டி, கரண்டி உள்பட 30 சின்னங்கள் ஒதுக்கீடு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளா்களுக்கு தீப்பெட்டி, கரண்டி உள்பட 30 சின்னங்கள் வழங்கப்படுகின்றன.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்டத்தில் சுயேச்சை வேட்பாளா்களுக்கு தீப்பெட்டி, கரண்டி உள்பட 30 சின்னங்கள் வழங்கப்படுகின்றன.

இதன்படி மாநில தோ்தல் ஆணையத்தால் சுயேச்சைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள்: கிடாா், அடையாளக் குறி, மறைதிருக்கி, வைரம், உலக உருண்டை, முகம் பாா்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி, ஊஞ்சல், நீளக் குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேற்சட்டை, கோப்பு அடுக்கும் அலமாரி, முள் கரண்டி, கெட்டில், ஹாக்கி மட்டையும் பந்தும், மகளிா் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு (இசைக்கருவி), கைப்பை, தீப்பெட்டி, கழுத்துக் கச்சு, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கேன் விளக்கு, கரண்டி, தண்ணீா் குழாய், உலாவுக்கான தடி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனுக்களை திங்கள்கிழமை மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம். வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு சுயேச்சைகளுக்கு சின்னம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com