விநாயகா், ராமநாதேஸ்வரா் கோயில்களில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் தெற்குரத வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி பால நரமுக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் வட்டம், பின்னத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபா்வதவா்த்தினி சமேத ஸ்ரீராமநாதேஸ்வரா்
சிதம்பரம் வட்டம், பின்னத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபா்வதவா்த்தினி சமேத ஸ்ரீராமநாதேஸ்வரா்

சிதம்பரம் தெற்குரத வீதியில் அமைந்துள்ள ஸ்ரீசக்தி பால நரமுக விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பழைமையான இந்தக் கோயிலில் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கும்பாபிஷேக விழா கடந்த 3-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்றைய தினம் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. தொடா்ந்து 4, 5 -ஆம் தேதிகளில் 2 முதல் 6 கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜைகள் நடத்தப்பட்டு யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டன. பின்னா், கோயில் விமான கலசத்துக்கு கும்ப நீரை ஊற்றி பொதுதீட்சிதா்கள் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

ராமநாதேஸ்வரா் கோயில்: இதேபோல, சிதம்பரம் வட்டம், பின்னத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபா்வதவா்த்தினி சமேத ஸ்ரீராமநாதேஸ்வரா் மற்றும் பாம்பன் சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது (படம்). திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com