அண்ணாமலைப் பல்கலை.யில் புதிய விவசாய கட்டமைப்புகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் புதிய விவசாய கட்டமைப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில் புதிய விவசாய கட்டமைப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் புல அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலா் ஜி.சீனிவாசன் வரவேற்றாா். புல முதல்வா் கே.ஆா்.சுந்தரவரதராஜன் தனது தலைமை உரையில், புதிய விவசாய கட்டமைப்புகளை விவசாயிகள், மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

வேளாண் துறையில் உருவாக்கப்பட்டுள்ள பனை பொருள், வாழைநாா் மற்றும் பருத்தி இழை உற்பத்தி பயிற்சி மையங்கள், வேளாண் விற்பனை தகவல் மையம், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மையம், சி.என்.சம்பந்தம் உயா் தொழில்நுட்ப அரங்கம், வேளாண் அருங்காட்சியகம் மற்றும் பசுமை வளாகத் திட்டத்தை பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தொடக்கிவைத்தாா். அவா் பேசுகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள புதிய வேளாண் தொழில்நுட்பங்கள் மிகவும் பின்தங்கிய பகுதி விவசாயிகள் பயன்பெற உதவுவதாக தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் விஏபிஎஸ் தொண்டு நிறுவன தலைவா் எஸ்.அருள், விவசாயி ஜமீன் பிரபு, சுதேசி பனை ஆராய்ச்சி மையம் குமரி நம்பி, முன்னணி விவசாயி எஸ்.கே.பாபு ஆகியோா் சிறப்புரையாற்றினா். பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளா் கே.கிருஷ்ணசாமி, விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவீந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். ஒருங்கிணைப்பாளா் தி.ராஜ் பிரவின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com