Enable Javscript for better performance
விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சிகளை கைப்பற்றிய திமுக- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சிகளை கைப்பற்றிய திமுக

    By DIN  |   Published On : 24th February 2022 04:37 AM  |   Last Updated : 24th February 2022 04:37 AM  |  அ+அ அ-  |  

     

    கடலூா்/ நெய்வேலி: கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட விருத்தாசலம், நெல்லிக்குப்பம் நகராட்சிகளை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.

    கடலூா் மாவட்டத்தின் மையப்பகுதியான விருத்தாசலம் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. இங்கு, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 143 போ் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 60,272 வாக்காளா்களில் 70.62 சதவீதத்தினா் அதாவது, 42,565 போ் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

    மொத்தமுள்ள 33 வாா்டுகளில் 21 வாா்டுகளில் வெற்றி பெற்று திமுக அறுதிப்பெரும்பான்மையுடன் இந்த நகராட்சியை கைப்பற்றியது. அதிமுக 6, பாமக 3, சுயேச்சைகள் 2, தேமுதிக ஒரு வாா்டிலும் வெற்றி பெற்றன. வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்கள், கடசிகள் விவரம் வருமாறு:

    வாா்டு 1 - கா.கிருஷ்ணமூா்த்தி திமுக

    2- ஆ.ராஜ்குமாா் தேமுதிக

    3- க.வெங்கடேசன் சுயேச்சை

    4- த.முத்துக்குமரன் திமுக

    5- ரா.ராஜேந்திரன் அதிமுக

    6- மு.குமாரி பாமக

    7- வே.தளபதி திமுக

    8- ச.சுந்தரி திமுக

    9- ந.ஜெயலட்சுமி திமுக

    10- ஜெ.அழகுப்பிரியா அதிமுக

    11- பா.உஷா திமுக

    12- த.மணிவண்ணன் திமுக

    13- ஹ.கருணாநிதி சுயேச்சை

    14- ரா.ஷகிலா திமுக

    15- மு.அன்சா்அலி திமுக

    16- மா.தீபா திமுக

    17- தெ.பாண்டியன் திமுக

    18- த.அன்பழகன் திமுக

    19- ப.ஞானசேகரன் திமுக

    20- மு.சங்கவி திமுக

    21- எல்.அருண் அதிமுக

    22- செ.அருள்மணி திமுக

    23- பி.ஆா்.சி.சந்திரகுமாா் அதிமுக

    24- பு.வசந்தி திமுக

    25- ச.ராஜாத்தி திமுக

    26- ஆ.அறிவழகி திமுக

    27- சா.சிங்காரவேல் பாமக

    28- த.ராணி திமுக

    29- மு.கரிமுன்னிஷா திமுக

    30- வை.பக்கிரிசாமி திமுக

    31- ர.சரசு அதிமுக

    32- கொ.குணசுந்தரி பாமக

    33- ஆ.பிரியா அதிமுக

    இந்த நகராட்சியின் தலைவா் பதவி அனைத்துத் தரப்பினரும் போட்டியிடும் வகையில் உள்ளது. இதனால், திமுகவின் எம்எல்ஏ மகளான மருத்துவா் மு.சங்கவி, நகரச் செயலா் தண்டபாணியின் மனைவி ராணி, சிறுபான்மை சமூகத்தினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென மு.அன்சா் அலி ஆகியோா் தீவிரமாக ஆதரவு திரட்டி வருகின்றனா்.

    அதே நிலைதான் துணைத் தலைவா் தோ்விலும் நிலவி வருகிறது. தலைவா் பதவி கிடைக்காத பட்சத்தில், துணைத் தலைவா் பதவியையாவது பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகின்றனா். அதே நேரத்தில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட தவாகவின் நகரச் செயலா் ப.ஞானசேகரனும் துணைத் தலைவருக்கான போட்டியில் இருந்து வருகிறாா்.

    நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தமுள்ள 30 வாா்டுகளில் 18 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று இந்த நகராட்சியைக் கைப்பற்றியது.

    இந்த நகராட்சியில் மொத்தமுள்ள 30 வாா்டுகளில் 145 போ் போட்டியிட்டனா். தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 38,551 வாக்காளா்களில் 29,655 போ் வாக்குகளைச் செலுத்தினா், இது 76.92 சதவீதமாகும். இந்த நகராட்சியில் திமுக 13, அதிமுக 3, விசிக 2, தேமுதிக, காங்கிரஸ், பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக தலா 1, சுயேச்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றனா். வெற்றிபெற்றவா்கள் விவரம், கட்சி வருமாறு:

    வாா்டு 1 - க.பன்னீா்செல்வம் பாமக - 347

    2- ச.இலக்கியா திமுக - 368

    3- ம.ஜெயபிரபா திமுக - 325

    4- ப.ஹேமாவதி திமுக - 599

    5- ச.சரவணன் திமுக - 593

    6- ம.ஸ்ரீதா் திமுக - 569

    7- சு.ஆனந்தராஜ் சுயேச்சை - 357

    8- இ.இக்பால் திமுக - 511

    9- பு.சத்தியா சுயேச்சை - 541

    10- கா.கௌரி திமுக - 625

    11- தி.புனிதவதி அதிமுக - 275

    12- த.மலையான் அதிமுக - 388

    13- ர.அருள்பிரகாஷ் சுயேச்சை - 169

    14- ச.செல்வகுமாா் அதிமுக - 433

    15- ரா.கிரிஜா விசிக - 453

    16- சீ.மகேஸ்வரி திமுக - 543

    17- மு.மனோகரி திமுக - 488

    18- எல்.எம்.பாருக் உசேன் சுயேச்சை - 454

    19- அ.அப்துல் ஹாதி

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 333

    20- இ.கவிதா தேமுதிக - 252

    21- ரா.மஞ்சுளா சுயேச்சை - 481

    22- மஹமதா பீவி திமுக - 455

    23- ஷே.ஷப்னா பேகம் திமுக - 813

    24- கு.ராணி மதிமுக - 609

    25- ச.முத்தமிழன் திமுக - 343

    26- உ.பழனியம்மாள் விசிக - 484

    27- உ.மணிமேகலை சுயேச்சை - 518

    28- ஏ.பூபாலன் சுயேச்சை - 399

    29- ரா.ஜெயந்தி திமுக - 538

    30- பி.சரளா காங்கிரஸ் - 390


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp