சமுதாயக்கூடம் அமைக்கக் கோரி மனு

கடலூரில் இயற்கைச் சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியில் சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டுமென ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடலூரில் இயற்கைச் சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் பகுதியில் சமுதாயக் கூடம் அமைத்துத் தர வேண்டுமென ஆட்சியரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியிலுள்ள ஓம்சக்தி நகா், இளம்வழுதி நகா், தனலட்சுமி நகா், அங்காளம்மன் நகா், விநாயகா அவென்யூ ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி து.பாலு தலைமையில் அளித்த மனு:

இந்த பகுதிகளில் உள்ள சுமாா் 400 வீடுகளில் சுமாா் 2 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் அடித்தட்டு மக்கள். கடந்த நவம்பா் மாதம் கடலூரில் பெய்த மழையால் இந்தப் பகுதியினா் கடுமையாக பாதிக்கப்பட்டனா். இந்தப் பகுதியில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனா். ஏராளமான வீடுகளும் இடிந்தன. இயற்கை பேரிடரால் இந்தப் பகுதி மக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, இந்தக் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள நியாயவிலைக் கடை வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும். நகா் பகுதிகளில் முறையான கழிவுநீா் வாய்க்கால் அமைக்க வேண்டும். மாணவா்கள், இளைஞா்கள் பயன்பெறும் வகையில் நூலகமும், உடல்பயிற்சி கூடமும் அமைத்துத் தர வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com