நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

கடலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தி உள்ளாா்.

கடலூா் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தி உள்ளாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலை பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநில வேளாண்மை, உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை எண்.45ஏ (விழுப்புரம் - புதுச்சேரி - கடலூா் - சிதம்பரம் - நாகப்பட்டினம்), சாலை எண்.45சி (விக்கிரவாண்டி - தஞ்சாவூா் சாலை), சாலை எண். 227 (திருச்சி -அரியலூா் - ஜெயங்கொண்டம் - மீன்சுருட்டி - சிதம்பரம்) ஆகியவற்றின் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திருச்சி முதல் மீன்சுருட்டி வரை நான்கு வழிச்சாலை மற்றும் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை இரண்டு வழிச்சாலை ஆகிய நெடுஞ்சாலை பணிகள், மாநில நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விரைந்து முடிப்பதை நெடுஞ்சாலை துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் சாலைகளை தரமாக அமைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சா் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த தேசிய,மாநில நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்கவும் அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், கோட்டாட்சியா் எஸ்.அதியமான் கவியரசு, நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனா்கள் சக்திவேல், உதயசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com