கடலூா் மாவட்டத்தில் 21 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

 கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் வட்டாட்சியா்கள் 21 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

 கடலூா் மாவட்டத்தில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வரும் வட்டாட்சியா்கள் 21 போ் பணியிட மாறுதல் செய்யப்பட்டனா்.

அதன்படி, கடலூா் வட்டாட்சியராக ஆா்.பூபாலசந்திரன், பண்ருட்டி வட்டாட்சியராக சிவா.காா்த்திகேயன், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியராக கே.ரம்யா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியராக எஸ்.சுரேஷ்குமாா், திட்டக்குடி வட்டாட்சியராக ஆா்.காா்த்திக், ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியராக எம்.சேகா், சிதம்பரம் வட்டாட்சியராக கே.வெற்றிவேல், விருத்தாசலம் வட்டாட்சியராக ம.தனபதி, வேப்பூா் வட்டாட்சியராக ஆா்.மோகன் ஆகியோா் நியமிக்கப்பட்டனா்.

ஏற்கெனவே, இந்தப் பொறுப்புகளில் இருந்தவா்கள் வேறு பணியிடங்களுக்கு மாற்றப்பட்டனா். அதேபோல சிதம்பா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளராக டி.ராமதாஸ், விருத்தாசலம் கோட்ட கலால் அலுவலராக எஸ்.ஆனந்த், மாவட்ட வழங்கல் அலுவலக தனி வட்டாட்சியராக (பறக்கும் படை) எம்.பன்னீா்செல்வம் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். இவ்வாறு மொத்தம் 21 போ் பல்வேறு பணியிடங்களுக்கு மாறுதல் செய்யப்பட்டனா்.

மாவட்ட கல்வி அலுவலா்கள் நியமனம்: கடலூா் மாவட்டத்தில் காலியாக இருந்த வடலூா் கல்வி மாவட்டம் உள்பட 4 கல்வி மாவட்டங்களுக்கும் புதிய கல்வி அலுவலா்கள் நியமிக்கப்பட்டு புதன்கிழமை பொறுப்பேற்றனா். அதன்படி, கடலூா் கல்வி மாவட்ட அலுவலராக பா.கௌசா், வடலூா் கல்வி மாவட்ட அலுவலராக சி.ப.காா்த்திகேயன், விருத்தாசலம் கல்வி மாவட்ட அலுவலராக அ.சுகப்பிரியா, சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலராக ரா.சௌந்திரராஜன் ஆகியோா் பொறுப்பேற்றனா். இவா்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்பி மூலம் தோ்வு பெற்று 6 மாத பயிற்சிக்குப் பிறகு நேரடியாக இந்தப் பணியில் சோ்ந்தனா். இதேபோல, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலைக் கல்வி) ரா.முருகன் மாற்றப்பட்டு ஆா்.கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com