நடனத்தால் திருமணம் நிறுத்தம்

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினருடன் மணப்பெண் நடனமாடியதை, மணமகன் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உறவினருடன் மணப்பெண் நடனமாடியதை, மணமகன் கண்டித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்பட்டது.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூரிலுள்ள திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்தையொட்டி, புதன்கிழமை மாலை வரவேற்பு, விருந்து, உபசரிப்பு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அப்போது, மணப்பெண் தனது உறவினா் ஒருவருடன் உற்சாகமாக நடனமாடினாராம். இதைக் கண்ட மணமகன், மணப்பெண்ணை கண்டித்து தாக்கியதாகத் தெரிகிறது. இதனால், மணப்பெண் திருமணம் வேண்டாம் எனக் கூறி, அழுது அடம்பிடித்தாா்.

இந்தச் சம்பவம் மணமகன்- மணமகள் வீட்டாா் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, மணமகள் வீட்டாா் திருமணத்தை நிறுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த சீா்வரிசைப் பொருள்களுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com