மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் கடலூரில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டம்

தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளா் சங்கத்தினா் கடலூரில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகம் முழுவதும் சுமாா் 3 ஆயிரம் பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பணி அமா்த்தப்பட்டனா்.

5 ஆண்டுகள் முடிந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாம். ஆனால், 9 ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

எனவே, அவா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா் சங்கத்தினா் கடலூரிலுள்ள மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கே. நரசிம்மன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கே.செல்வகுமாா், பொருளாளா் ஆா்.கவுண்டா்மணி முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பெ.நல்லதம்பி சிறப்புரையாற்றினாா். மாவட்டத் தலைவா் வீ.குணசேகரன் கருத்துரை வழங்கினாா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னா், கோரிக்கைகள் மற்றும் வரும் பிப்.3-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற உள்ளதால் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com