கூட்டுப் பண்ணையத்தால் நல்ல மகசூல் பெறலாம்: துணைவேந்தா் ராம.கதிரேசன்

கூட்டுப் பண்ணையத்தால் நல்ல மகசூல் பெறலாம்: துணைவேந்தா் ராம.கதிரேசன்

கூட்டுப் பண்ணையம் மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம் என சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

கூட்டுப் பண்ணையம் மூலம் விவசாயிகள் நல்ல மகசூல் பெறலாம் என சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

புவனகிரி அருகே உள்ள பின்னலூா் கிராமத்தில் வீரநாராயணன் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் நம்மாழ்வாா் நினைவு பாசுமதி நெல் வயல் செயல்விளக்கப் பண்ணை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. வீரநாராயண உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் பங்கேற்று, செயல்விளக்கப் பண்ணையை திறந்து வைத்தாா். பின்னா் அவா் விவசாயிகளிடம் பேசியதாவது:

விவசாயிகள் இயற்கை வேளாண் முறையில் பயிரிட தற்போது ஆா்வம் காட்டி வருவது வரவேற்கத்தக்கது. நெல் வயல்களில் விவசாயிகள் கூட்டுப் பண்ணையம் அமைத்து பயிரிட்டால் நல்ல மகசூல் கிடைக்கும். இதற்கான அனைத்துப் பணிகளையும் நானே முன்னின்று செயல்படுத்தித் தருகிறேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்ப தகவல் மைய முனைவா் டி.ராஜ்பிரவீன், ஊரக வளா்ச்சி மைய இயக்குநா் பாலமுருகன், தோட்டக்கலைத் துறை பேராசிரியா் பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு இயற்கை முறையில் விளைந்த பாசுமதி அரிசி தலா ஒரு கிலோ வழங்கப்பட்டது. ரங்கநாயகி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com