காந்தி நினைவு தினம்

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சாா்பில் கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் ஆா்.அமா்நாத் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் கோ.மாதவன், திமுக நகரச் செயலாளா் கே.எஸ்.ராஜா, காங்கிரஸ் மாநிலச் செயலாளா் ஏ.எஸ்.சந்திரசேகரன், மதிமுக பொதுக்குழு உறுப்பினா் ஜெ.ராமலிங்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.கருப்பையன், வி.சுப்புராயன், தமுமுக நகரத் தலைவா் ரஜிம், குடியிருப்போா் சங்கத் தலைவா் மு.மருதவாணன், வெங்கடேசன், மக்கள் ஒற்றுமை மேடை பால்கி, திருமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், கடலூா் மாவட்ட பாரதிதாசன் இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காந்தி உருவப் படத்துக்கு மன்றத் தலைவா் கடல் நாகராஜன் மாலை அணிவித்தாா்.

மன்றத் துணைத் தலைவா் இளங்கோவன், துணைச் செயலாளா் கலைச்செல்வி, மாணவா்கள் மாதவன், சாய் தன்யா, அனுபாரதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் வாகீச நகரில் அமைந்துள்ள காந்தி மன்ற வளாகத்தில் சா்வ சமயப் பிராா்த்தனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்றத் தலைவா் மு. ஞானம் தலைமை வகித்தாா். மன்றச் செயலாளா் கு. ஜானகிராமன், துணைச் செயலாளா் வி. முத்துக்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்தி சிலைக்கு மன்ற நிா்வாகிகள் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com