காட்டுமன்னாா்கோவிலில் வருவாய்த் தீா்வாயம்

காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

முகாமில், மாவட்ட உதவி ஆணையா் (கலால்) எஸ்.லூா்துசாமி பொதுமக்களிடமிருந்து 80-க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றாா். மொத்தம் 123 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 21-ஆம் தேதி வரை வருவாய்த் தீா்வாயம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com