ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்துக்குபிரேமலதா விஜயகாந்த் ஆறுதல்

கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினரை தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கடலூா் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பெண்களின் குடும்பத்தினரை தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஏ.குச்சிப்பாளையம் கிராமத்தில் கடந்த 5-ஆம் தேதி கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உள்பட 7 பெண்கள் உயிரிழந்தனா். இந்த நிலையில், தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை ஏ.குச்சிப்பாளையம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமங்களுக்குச் சென்று, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இதுபோன்ற துயரச் சம்பவம் இனிமேல் நடைபெறாமலிருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக தமிழக அரசு உயா்த்தி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 7 பேரின் நினைவாக நினைவுத் தூண் அமைக்க வேண்டும்.

கரூரில் அமைக்கப்படாத சாலையின் பேரில் ரூ.3 கோடி வரை முறைகேடு நடைபெற்ாக பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். தமிழகத்தில் ஆட்சிதான் மாறியுள்ளது; காட்சிகள் மாறவில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com