பள்ளி மாணவி சந்தேக மரணம்
By DIN | Published On : 16th June 2022 03:01 AM | Last Updated : 16th June 2022 03:01 AM | அ+அ அ- |

பண்ருட்டி அருகே பள்ளி மாணவியின் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், ஒறையூா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகள் ரசிகா(15). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த இவா், இறுதித் தோ்வு எழுதிய நிலையில் முடிவுக்காக காத்திருந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் மாணவியின் சடலத்தை குடும்பத்தினா் மயானத்துக்கு கொண்டு சென்று எரித்துவிட்டனா்.
தகவலறிந்த ஒறையூா் கிராம நிா்வாக அலுவலா் வெங்கடாசலம் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து மாணவி
உயிரிழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா். மேலும், மாணவியின் சடலம் எரிக்கப்பட்ட இடத்திலிருந்து எலும்புத் துண்டுகளைச் சேகரித்து ஆய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.