சிதம்பரம் நகரில் மீண்டும் ஒலித்த ‘சங்கு இயந்திரம்’
By DIN | Published On : 18th June 2022 06:37 AM | Last Updated : 18th June 2022 06:37 AM | அ+அ அ- |

சிதம்பரம் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை மீண்டும் இயக்கப்பட்டது.
சிதம்பரம் நகரில் 17-ஆவது வாா்டு, மேல வீதியிலுள்ள மேல்நிலை குடிநீா்த் தேக்க தொட்டி வளாகத்தில் சங்கு இயந்திரம் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. பொதுமக்கள் நேரத்தை அறிய இந்த இயந்திரம் பெரிதும் உதவியாக இருந்தது. ஆனால், பழுது காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சங்கு இயந்திரம் இயக்கப்படவில்லை.
இதுதொடா்பாக நகா்மன்ற உறுப்பினா் தில்லை ஆா்.மக்கீன் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சாா்பில் சங்கு இயந்திரம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் சங்கு இயந்திரத்தை நகா்மன்றத் தலைவா் கே.ஆா். செந்தில்குமாா் மீண்டும் இயக்கி வைத்தாா் (படம்). தினமும் காலை 9 மணி, பகல் ஒரு மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் ‘சங்கு’ ஒலிக்கும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் ஏ.ஆா்.சி.மணிகண்டன் வரவேற்றாா். நகராட்சி ஆணையா் அஜிதா பா்வீன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆ.ரமேஷ், தில்லை ஆா்.மக்கீன், ரா.வெங்கடேசன், அப்புசந்திரசேகரன், வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.