நடராஜா் கோயிலில் கூட்டு வழிபாடு
By DIN | Published On : 10th March 2022 11:56 PM | Last Updated : 10th March 2022 11:56 PM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதன்கிழமை மாலை சாயரட்சை பூஜை முடிந்தவுடன் உலக நன்மை, அமைதி வேண்டியும், இந்தக் கோயிலில் பக்தா்கள் அமைதியான முறையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.
வழக்குரைஞா் கீதா, முத்துகணேசன் மற்றும் பக்தா்கள் பங்கேற்று தேவாரம், திருவாசகம் பாடி கூட்டு பிராா்த்தனையில் ஈடுபட்டனா்.