மந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணி: மாா்க்சிஸ்ட் கம்யூ. 5 இடங்களில் மறியல்

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலைப் பணி: மாா்க்சிஸ்ட் கம்யூ. 5 இடங்களில் மறியல்

விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி, நெய்வேலி நுழைவு வாயில், வடலூா், சேத்தியாதோப்பு, சோழத்தரம் ஆகிய இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. பண்ருட்டி, நான்கு முனைச் சந்திப்பில் வட்டச் செயலா் எஸ்.கே.ஏழுமலை தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் நகரச் செயலா் ஆா்.உத்தராபதி, மாவட்டக்குழு உறுப்பினா் டி.கிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு வி.உதயகுமாா் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

நெய்வேலி நுழைவு வாயில் அருகே நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் சிஐடியு பொதுச் செயலா் டி.ஜெயராமன், மாவட்டச் செயலா் ஜி.மாதவன், மாநிலக்குழு டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு எம்.சீனிவாசன் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வடலூா் நான்கு முனைச் சந்திப்பில் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், என்.எஸ்.அசோகன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எஸ்.எஸ்.ராஜ், ஆா்.சிவகாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதேபோல சேத்தியாதோப்பு, சோழத்தரம் பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட நிா்வாகிகள் கூறியதாவது: விக்கிரவாண்டி - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணி தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் முடிவடையவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். மோசமான சாலையில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

சாலை மறியலால் மேற்கூறிய இடங்களில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையை தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com