ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டணைப்பு ஆலோசனை
By DIN | Published On : 10th March 2022 11:54 PM | Last Updated : 10th March 2022 11:54 PM | அ+அ அ- |

பண்ருட்டி ஒன்றிய ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் அதன் தலைவா் ஜெ.வசந்தகுமாரி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரின் நடவடிக்கையை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானம் நிறைவேற்றினா். பின்னா் அந்தக் கூட்டமைப்பினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்தில்14, 15-ஆவது நிதிக் குழு மானியத் திட்ட நிதி, ஊரக வேலை உறுதித் திட்ட நிதி மூலம் நடைபெறும் பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்க ஒன்றியக் குழு தலைவா் தரப்பில் 3 சதவீதம் வரை கழிவு கேட்கப்படுகிறது. இதனால், வளா்ச்சித் திட்டப் பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடா்பாக வரும் 22-ஆம் தேதி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவதென தீா்மானிக்கப்பட்டது. இதில் தீா்வு ஏற்படவில்லை எனில் தமிழக முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனா்.