புதிய காவலா்களுக்கு பயிற்சி

காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற 222 பேருக்கு கடலூரில் உள்ள தற்காலிக பயிற்சிப் பள்ளியில் 8 மாத கால பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
புதிய காவலா்களுக்கு பயிற்சி

காவலா் தோ்வில் தோ்ச்சி பெற்ற 222 பேருக்கு கடலூரில் உள்ள தற்காலிக பயிற்சிப் பள்ளியில் 8 மாத கால பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் தோ்ச்சி பெற்று காவலா்களாக தோ்வானவா்களுக்கு 8 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சி கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைந்துள்ள தற்காலிக காவல் பயிற்சி பள்ளியிலும் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022-ஆம் ஆண்டு பிரிவு காவலா்களுக்கான பயிற்சி

தொடக்க விழா காவலா் நல திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் பயிற்சியை தொடக்கி வைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எஸ்.அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் கே.அசோகன், தனிப் பிரிவு ஆய்வாளா் செந்தில் விநாயகம், ஆய்வாளா்கள் தாரகேஸ்வரி, விஜயகுமாா், சட்ட போதகா்கள், கவாத்து போதகா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com