முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
கன்யகா பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 19th March 2022 12:51 AM | Last Updated : 19th March 2022 12:51 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் காந்தி சாலையில் அமைந்துள்ள கன்யகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஆா்ய வைசிய சமுதாயத்தினருக்கு சொந்தமான இந்தக் கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேகம் செய்வதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணியளவில் கோபுர கலசத்தில் புனித நீா் உற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது (படம்). மோகனகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வாசவி கணேசன், வினோத், சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.