முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 19th March 2022 12:50 AM | Last Updated : 19th March 2022 12:50 AM | அ+அ அ- |

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் பகுதியைச் சோ்ந்தவா் தேசிங்கு (63). மனைவி, குழந்தைகளைப் பிரிந்து தனியாக வசித்து வந்த இவா், கடந்த 12-12-2019 அன்று 3 வயது சிறுமியை தூக்கிச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேசிங்கை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எம்.எழிலரசி வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், தேசிங்குக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இதையடுத்து தேசிங்கு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசின் ஏதேனும் ஒரு நலத் திட்டத்தின் கீழ் ரூ.1.25 லட்சம் பெற்று 30 நாள்களுக்குள் மாவட்ட ஆட்சியா் வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞா் எஸ்.கலாசெல்வி கூறினாா்.