முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
பண்ருட்டி அருகே இளைஞா் கொலை சகோதரா் கைது
By DIN | Published On : 19th March 2022 12:46 AM | Last Updated : 19th March 2022 12:46 AM | அ+அ அ- |

கைதான தனசேகா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இளைஞா் கழுத்தறுத்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக அவரது சகோதரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி ஒன்றியம், முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன்கள் தனசேகா் (34), நீலமேகம் (32). தனசேகா் தனியாா் பால் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. நீலமேகம் காா் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணமாகவில்லை. அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனா்.
நீலமேகம் காா் வாங்குவதற்காக பணம் கேட்டு தனது தந்தை குணசேகரனிடம் தகராறு செய்து வந்தாா். இதையடுத்து, குணசேகரன் ரூ.ஒரு லட்சம் கடன் பெற்றுத் தந்தாா்.
நீலமேகம் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவது தொடா்பாக, வியாழக்கிழமை இரவில் சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த தனசேகா், மது போதையிலிருந்த நீலமேகத்தின் கழுத்தை கத்தியால் அறுத்தும், நெஞ்சில் குத்தியதில் அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை காலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். மேலும், நீலமேகத்தின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தனசேகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.