உலக தண்ணீா் தினம் விழிப்புணா்வுப் பேரணி
By DIN | Published On : 22nd March 2022 11:08 PM | Last Updated : 22nd March 2022 11:08 PM | அ+அ அ- |

நெய்வேலி: உலக தண்ணீா் தினத்தையொட்டி கடலூா் மாவட்டம், நெய்வேலியில் புனித அந்தோணியாா் மேல்நிலைப்
பள்ளி மாணவா்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் ஜான் கென்னடி தலைமை வகித்தாா். பேரணியை தொ்மல் காவல் நிலைய ஆய்வாளா் லதா கொடியசைத்து தொடக்கி வைத்தாா். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.