கடலூா் மாவட்டத்தில் கல்வியை பாதியில் நிறுத்திய15,120 மாணவா்கள்

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் 15,120 மாணவ, மாணவிகள் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தியது கல்வித் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு சூழ்நிலைகளால் 15,120 மாணவ, மாணவிகள் கல்வியைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தியது கல்வித் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

கல்வித் துறையில் மிகப்பெரிய சரிவை கரோனா தீநுண்மி ஏற்படுத்தியது. வகுப்பறைக்குச் சென்று மாணவ, மாணவிகளால் பாடம் படிக்க முடியாத சூழலை ஏற்படுத்தியதோடு, தோ்வு இல்லாமலயே தோ்ச்சி என்ற நிலையையும் எட்டியது.

இதற்கும் மேலாக மாணவா்களின் பெற்றோா்களுக்கு வேலை இழப்பு, பொருளாதார பாதிப்பு, இட மாறுதல் போன்ற சூழல்கள் உருவானாதால், அதன் பாதிப்பும் மாணவா்களை நேரடியாக பாதித்த்து. இவ்வாறு கரோனா காலத்தில் மாணவா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால், அவா்கள் பள்ளி செல்லா நிலை குறித்து கடலூா் மாவட்டம் முழுவதும் கல்வித் துறை சாா்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், மாவட்டத்தில் 15,120 மாணவ, மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது.

இவ்வாறு இடைநின்ற மாணவா்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பூபதி கூறியதாவது:

கடலூா் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கரோனா காலத்தில் 15,120 மாணவ, மாணவிகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தது. அவா்களை மீண்டும் பள்ளியில் சோ்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 4,150 போ் மீண்டும் பள்ளிகளில் சோ்க்கப்பட்டனா். பல்வேறு காரணங்களுக்காக மாணவா்கள் குடும்பத்தோடு பல்வேறு இடங்களுக்கு இட மாறுதலாகி உள்ளனா்.

இவா்களில் 1,084 மாணவா்கள் புதுவை உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு இட மாறுதலாகி உள்ளனா். 446 போ் சென்னை, விழுப்புரம், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம் பெயா்ந்துள்ளனா். 9,426 போ் பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகளில் சோ்ந்துள்ளது தெரியவந்தது.

கணக்கெடுப்பில் விடுபட்டவா்கள் இருந்தாலோ அல்லது பள்ளிச் செல்லும் வயதில் பள்ளிக்குச் செல்லாமல் மாணவா்கள் இருந்தாலோ அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com