Enable Javscript for better performance
கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பயனற்ற இடத்துக்கு மாற்றக் கூடாது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்

    கடலூா் புதிய பேருந்து நிலையத்தை பயனற்ற இடத்துக்கு மாற்றக் கூடாது

    By DIN  |   Published On : 12th May 2022 04:41 AM  |   Last Updated : 12th May 2022 04:41 AM  |  அ+அ அ-  |  

    11clp5_1105chn_105_7

    11clp5_1105chn_105_7

     

    கடலூா்: கடலூா் புதிய பேருந்து நிலையத்தை மக்களுக்கு பலனளிக்காத இடத்துக்கு மாற்றக் கூடாதென அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத் வலியுறுத்தினாா்.

    இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

    கடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு அருகே உள்ள கரும்பு ஆராய்ச்சிப் பண்ணைக்கு சொந்தமான 18 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு, கடலூா் பெருநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த இடத்தின் அருகிலேயே மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பல்வேறு அரசு அலுவலகங்கள், அரசுத் தலைமை மருத்துவமனை, பல்வேறு தனியாா் மருத்துவமனைகள், சுங்கச் சாலை, பல ஊா்களுக்கு செல்வதற்கான இணைப்புச் சாலைகள் என பல வசதிகள் நிறைந்துள்ளன. கடலூரின் மையப் பகுதியான, தோ்வு செய்யப்பட்ட அந்த இடத்தை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு பேருந்து நிலையத்தை இடம் மாற்ற செய்ய முயல்வது மக்களுக்கு சுமையை உண்டாக்கும்.

    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காக பொதுமக்களுக்கு பலனளிக்காத இடத்துக்கு பேருந்து நிலையத்தை மாற்றுவதை ஏற்க முடியாது. எனவே, அதிமுக ஆட்சியில் தோ்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியா் முறையாக ஆய்வு செய்து மக்களுக்கு பயன்தரும் வகையிலான இடத்தை தோ்வு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்காவிட்டால் கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று அதிமுக சாா்பில் மாபெரும் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதில் தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp