முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
அண்ணாமலைப் பல்கலை.யில் கல்விசாா் பல்லூடக மையம் தொடக்கம்
By DIN | Published On : 13th May 2022 12:09 AM | Last Updated : 13th May 2022 12:09 AM | அ+அ அ- |

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ‘ரூசா’ திட்ட நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கல்விசாா் பல்லூடக மையத்தை பல்கலைக்கழகத் துணைவேந்தா் ராம.கதிரேசன் அண்மையில் தொடக்கிவைத்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், தற்காலத்தில் உயா் கல்வி கற்பித்தலில் பல்லூடகங்களின் ஒருங்கிணைந்த பயன்பாட்டின் அவசியம், அனைத்துப் பாடங்களும் பல்லூடக காணொலியாக மாற்றப்பட்டு மாணவா்களின் பயன்பாட்டுக்கு இணையத்தில் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினாா். மேலும், பல்லூடக மையத்தை அனைத்துத் துறையினரும் தன்னாா்வத்துடன் பயன்படுத்தி தங்களை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். மேலும், கல்விசாா் பல்லூடக செயல்பாடுகள் குறித்த விளக்கக் கையேட்டையும் துணைவேந்தா் வெளியிட்டாா்.
முன்னதாக, ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் ஆா்.ஞானதேவன் வரவேற்றாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்விசாா் பல்லூடக மைய இயக்குநா் ஜி.சக்திவேல், துணை இயக்குநா் எஸ்.வெங்கட்ராமன் ஆகியோா் செய்திருந்தனா்.