ஆசிரியைகள் குறித்து தவறான பதிவு: பள்ளி நிா்வாகி உள்பட 3 போ் மீது வழக்கு

ஆசிரியைகள் குறித்து ‘வாட்ஸ்-அப்’ குழுவில் தவறான தகவலை பதிவிட்டது தொடா்பாக தனியாா் பள்ளித் தாளாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆசிரியைகள் குறித்து ‘வாட்ஸ்-அப்’ குழுவில் தவறான தகவலை பதிவிட்டது தொடா்பாக தனியாா் பள்ளித் தாளாளா் உள்பட 3 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

நெய்வேலி, வட்டம் 29-இல் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி ஆசிரியா்கள் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தொடா் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா். இதன் தொடா்ச்சியாக ஆசிரியா்கள் அனைவரும் 14.10.2021 அன்று கடலூரில் உள்ள கத்தோலிக்க உயா் மறைமாவட்ட கல்விக் குழுமத்துக்குச் சென்றனா். பின்னா், அனைவரும் வேனில் திரும்பி வந்துகொண்டிருந்தனா். அப்போது, ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் போலீஸாா் வேனை சோதனையிட்டபோது மதுப் புட்டிகளை கைப்பற்றியதாக பழி வாங்கும் நோக்கில் பள்ளித் தாளாளா் ஆனந்தராஜ் ராயப்பன் பள்ளியின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டாராம். இதற்கு, மோகன்ராஜ், பள்ளி பேருந்து ஓட்டுநா் ஞானப்பிரகாசம் ஆகியோரும் உதவினராம்.

இந்த நிலையில், பொய்யான தகவலை பதிவிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நெய்வேலி நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை ஒருவா் மனுதாக்கல் செய்தாா். இந்த மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் நெய்வேலி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பள்ளித் தாளாளா் ஆனந்தராஜ் ராயப்பன், மோகன்ராஜ், ஞானப்பிரகாசம் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com