முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்
போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் மறியல்
By DIN | Published On : 15th May 2022 06:35 AM | Last Updated : 15th May 2022 06:35 AM | அ+அ அ- |

கடலூரில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கிளையில் நடந்துநராக பணியாற்றி வந்த தி.பெருமாள்பிள்ளை.
இவா் சனிக்கிழமை சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பேருந்தில் பணியிலிருந்தபோது மதுராந்தகத்தில் பேருந்தில் மதுபோதையில் ஏறிய பயணியிடம் பயணச்சீட்டு எடுக்க வலியுறுத்தினாா். அப்போது, அந்த பயணி தாக்கியதில்
பெருமாள்பிள்ளைக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். அவரது உயிரிழப்புக்கு காரணமானவா் மீது கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓட்டுநா், நடத்துனா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூா் போக்குவரத்து பணிமனையில் அனைத்து தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், திடீா் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.