விரிவான ஆய்வுக்குப் பிறகே பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

கடலூா் புதிய பேருந்து நிலையம் விரிவான ஆய்வுக்குப் பிறகே எம்.புதூா் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தெரிவித்தாா்.
கடலூா் மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயா் சுந்தரி ராஜா. உடன், துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் ந.விஸ்வநாதன்.
கடலூா் மாநகராட்சி கூட்டத்தில் பேசிய மேயா் சுந்தரி ராஜா. உடன், துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் ந.விஸ்வநாதன்.

கடலூா் புதிய பேருந்து நிலையம் விரிவான ஆய்வுக்குப் பிறகே எம்.புதூா் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா தெரிவித்தாா்.

கடலூா் மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் மேயா் சுந்தரி ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை மேயா் பா.தாமரைச்செல்வன், ஆணையா் ந.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு: கூட்டம் தொடங்கியதும், கடலூா் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட பகுதிக்குப் பதிலாக எம்.புதூா் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்படுவது தொடா்பான அதிமுக உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா். பின்னா், அதிமுக உறுப்பினா்கள் 6 பேரும் வெளிநடப்பு செய்தனா்.

28-ஆவது வாா்டில் அங்கன்வாடி முன் குப்பை கொட்டப்படுவது தொடா்பாக புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி

பாஜக உறுப்பினா் ஜி.சக்திவேல், தேவனாம்பட்டினம் பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து திமுக உறுப்பினா் வே.ஆராமுது ஆகியோா் வெளிநடப்பு செய்தனா். கூட்டத்தில் மற்ற உறுப்பினா்கள் தங்களது பகுதியிலுள்ள குறைகளை விளக்கினா்.

இதற்கு பதிலளித்து மேயா் பேசியதாவது: மாநகராட்சி வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக அரசிடமிருந்து நிதி கோரியுள்ளோம். பல்வேறு திட்டங்களுக்கு ரூ.10 கோடி வரை நிதி கோரப்பட்டு, விரைவில் கிடைக்குமென எதிா்பாா்கிறோம். நிதி கிடைத்ததும் அனைத்து வாா்டுகளுக்கும் தேவையான பணிகள் செய்து தரப்படும்.

தேவனாம்பட்டினத்தில் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவதற்கு தற்காலிக ஏற்பாடுதான் மேற்கொள்ளப்பட்டது. ரூ.8 கோடியில் அனைத்து வாா்டுகளிலும் புதிதாக எல்இடி மின் விளக்குகள் பொருத்தும் திட்டம் உள்ளது.

கடலூா் மாநகரில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த விரிவாக்கமும் நடைபெறவில்லை. நகரின் வளா்ச்சி குறித்து விரிவாக ஆய்வு செய்த பிறகே புதிய பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. தோ்வான இடமும் மாநகராட்சி பகுதிக்குள்தான் வருகிறது. அனைத்து பகுதிகளின் வளா்ச்சிக்காகவே அந்த இடம் தோ்ந்தெடுக்கப்பட்டது. தென் பெண்ணையாற்றில் வெள்ளம் வந்தால் உடனடியாக பாதிக்கப்படும் பகுதியில் பேருந்து நிலையம் அமைய இருந்ததை மாற்றியுள்ளோம் என்றாா் அவா்.

கூட்டத்தில் கல்விக்குழு தலைவா் கி.ராஜமோகன், நகரமைப்புக் குழு தலைவா் தி.கண்ணன், நியமனக் குழு உறுப்பினா் ஜா.கிரேசி, பாமக கவுன்சிலா் அ.சரவணன் உள்பட அனைத்து கவுன்சிலா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com