யூடியூபரைக் கண்டித்து போராட்டம்: சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்
By DIN | Published On : 23rd May 2022 12:06 PM | Last Updated : 24th May 2022 04:47 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குவிந்த சிவனடியார்கள்.
சிதம்பரம்: நடராஜ பெருமாளையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யூடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி, சிதம்பரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.
சிதம்பரம் நடராஜ பெருமாளையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யூடியூப் மைனர் விஜயை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து சிவனடியார்கள் ஒன்றினைப்பு குழு சார்பில் சிதம்பரத்தில் இன்று திங்கள்கிழமை மதியம் கண்டன ஆர்ப்பாட்டம் சிவதாமோதரன் சுவாமிகள் தலைமையில் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் நடராஜன் சுவாமிகள், வாதவூரடிகள் சுவாமிகள், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் ஞானகுரு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், இந்து மக்கள் தமிழர் கட்சி ராம.ரவிக்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் ஜோதி குருவாயூரப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்கின்றனர்.
போராட்டத்தில் பங்கேற்க வந்துள்ள சிவனடியார்கள் 10-க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களில் தங்கியுள்ளனர். சிதம்பரத்தில் எங்கு பார்த்தாலும் சிவனடியார்கள் கூட்டம் அலைமோதுகிறது. நடராஜர் கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் குவிந்து தேவாரம், திருவாசகம் பாடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி சு.ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
படவிளக்கம்-