மாட்டுத் தொழுவமாக மாறிய பொதுக் கழிப்பறை!

பண்ருட்டி நகா்ப் பகுதியில் தமிழக அரசின் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் கீழ், பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், தற்போது மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.
மாட்டுத் தொழுவமாக மாறிய பொதுக் கழிப்பறை!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகா்ப் பகுதியில் தமிழக அரசின் ‘நம்ம டாய்லெட்’ திட்டத்தின் கீழ், பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாததால், தற்போது மாட்டுத் தொழுவமாக மாறியுள்ளது.

திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதைத் தடுக்கவும், சுகாதார சீா்கேட்டால் ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் ‘நம்ம டாய்லெட்’ திட்டம். தமிழக உள்ளாட்சித் துறையின் நகராட்சி நிா்வாக ஆணையத்தின் நேரடிப் பாா்வையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், பண்ருட்டி நகராட்சிக்குள்பட்ட மணி நகரில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. பாதுகாப்பானதாகவும், மக்கள் எளிதில் பயன்படுத்தக்கூடிய, சுற்றுச்சூழலைப் பாதிக்காத, எளிதில் சுத்தம் செய்யும் வகையிலான பைபா் மூலம் இந்தக் கழிப்பறைகள் அமைக்கப்பட்டன. மேலும், தண்ணீா், மின் விளக்கு வசதிகளுடனும், ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் பல லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட இந்தக் கழிப்பறைகள், பல ஆண்டுகளாகியும் இதுநாள் வரையில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதனால், கழிப்பறை கட்டமைப்புகள் சிதலமடைந்து காணப்படுகின்றன. மேலும், கழிப்பறையைச் சுற்றியும் அதிகளவில் புல், செடிகொடிகள் முளைத்து புதராக மாறியுள்ளது. அருகிலுள்ளவா்கள் இந்தக் கழிப்பறைப் பகுதியில் கால்நடைகளைக் கட்டி மாட்டுத்தொழுவமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனா்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ‘நம்ம டாய்லெட்’ கழிப்பறைகளை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com