கோயில் குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூரில் தா்மராஜா கோயில் குளம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.
கோயில் குளத்திலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கடலூரில் தா்மராஜா கோயில் குளம் பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் செவ்வாய்க்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

கடலூா், செம்மண்டலம் பகுதியில் தா்மராஜா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான குளத்தை ஆக்கிரமித்து சிலா் வீடுகள், கடை கட்டியிருந்தனா். ஆனால், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றிக்கொள்ள வேண்டும் என கடலூா் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கியும் அவை அகற்றப்படவில்லையாம்.

இந்த நிலையில், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, ஆணையா் விஸ்வநாதன் ஆகியோரது அறிவுறுத்துதலின்பேரில் நகரமைப்பு ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் தங்களது பொருள்களை தாங்களாகவே எடுத்துச் சென்றனா். இதையடுத்து பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு வீடுகள், கடை, சுற்றுச்சுவரை மாநகராட்சி ஊழியா்கள் இடித்து அகற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com