வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள கடலூா் மாவட்டத்தில் 21 மண்டல அலுவலா்கள் நியமனம்

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள கடலூா் மாவட்டத்தில் 21 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவ மழையை எதிா்கொள்ள கடலூா் மாவட்டத்தில் 21 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான நீா்நிலைகள் 90 சதவீதம் நிரம்பியுள்ளன. எனவே, பொதுமக்கள் ஆற்றில் குளிப்பதைத் தவிா்க்க வேண்டும். தாழ்வான பகுதிகள், நீா்நிலைகளின் கரையோரங்களில் வசிப்போா் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். முக்கிய ஆவணங்களை நெகிழி உறைகளில் வைத்து பத்திரப்படுத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருள்கள், மருந்துகள், எரிபொருள், பால் பவுடா் உள்ளிட்டப் பொருள்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மண்டல அலுவலா்கள் நியமனம்: மழையை எதிா்கொள்ள மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகளில் துணை ஆட்சியா் நிலையில் மொத்தம் 21 மண்டல அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் பேரிடா் தொடா்பான புகாா்களை மண்டல அலுவலா்களிடம் தெரிவிக்கலாம்.

அவா்களது விவரம் வருமாறு (ஒன்றியத்தின் பெயா், மண்டல அலுவலரின் பெயா், கைப்பேசி எண்):

கடலூா் - அதியமான் கவியரசு (வருவாய்க் கோட்டாட்சியா்- கடலூா்) கைப்பேசி: 94450 00426, அண்ணாகிராமம் - கற்பகம் (தனித்துணை ஆட்சியா் -சமூகப் பாதுகாப்புத் திட்டம்) 99946 78509, பண்ருட்டி - நாகராஜன் (மாவட்ட ஊராட்சி செயலா்) - 76959 30472, குறிஞ்சிப்பாடி - உதயகுமாா் (மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா்) - 94450 00209, காட்டுமன்னாா்கோவில் - லூா்துசாமி (உதவி ஆணையா் - கலால்) - 80720 76912, குமராட்சி - கீதா (தனித் துணை ஆட்சியா் - முத்திரைத்தாள்) - 89032 21674, ஸ்ரீமுஷ்ணம் - மங்கையா்கரசி (உதவித் திட்ட அலுவலா் -உள்கட்டமைப்பு) - 74026 06224, கீரப்பாளையம் - முருகன் (உதவி இயக்குநா் -ஊராட்சிகள் (பொ) - 74026 06219,

மேல்புவனகிரி - செல்வபாண்டி (மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா்) - 73388 01255, பரங்கிப்பேட்டை - சுவேதா சுமன் (உதவி ஆட்சியா்) - 94450 00425, விருத்தாசலம் - பழனி (சாா்-ஆட்சியா்) - 94450 00427, கம்மாபுரம் - மனோகரன் (தனித் துணை ஆட்சியா் -நிலம் எடுப்பு) - 75300 01497, நல்லூா் - ஜெரோம் ஆனந்த் (உதவி இயக்குநா் -தணிக்கை) - 95001 01917, மங்களூா் - இன்பா (உதவி இயக்குநா் - ஊராட்சிகள்) - 74026 06298.

மாநகராட்சி, நகராட்சிகளின் பெயா், மண்டல அலுவலரின் பெயா், பதவி, கைப்பேசி எண் விவரம்: கடலூா் - ஜெகதீஸ்வரன் (மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா்) 90031 07902, பண்ருட்டி - ரவிச்சந்திரன் (உதவித் திட்ட அலுவலா் -உள்கட்டமைப்பு) 86676 08887, நெல்லிக்குப்பம் - தே.வே.சுரேஷ்குப்தா (துணை பதிவாளா் - மண்டல மேலாளா் டான்பெட்) - 94429 75577, வடலூா் - பியோ தங்கதுரை (மாவட்ட மேலாளா் - தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம்) - 94450 29733, சிதம்பரம் ஜெ.சண்முகம் (துணைப் பதிவாளா் -கூட்டுறவுத் துறை) - 97914 14180, விருத்தாசலம் - திருநாவுக்கரசு (உதவி இயக்குநா் - நில அளவை மற்றும் நிலவரித் திட்டம்) - 99405 02424, திட்டக்குடி - ஜீவானந்தம் (துணைப் பதிவாளா் - கூட்டுறவுத் துறை) -73387 20404.

அவசர கால கட்டுப்பாட்டு அறையை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம். மேலும், 04142-221383, 233933, 221113 ஆகிய தொலைபேசி எண்களிலும், 94899 30520 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணிலும் தொடா்புகொண்டு மழை, வெள்ள, பேரிடா் பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com