சிறுமிக்கு திருமணம்: இருவா் மீது வழக்கு
By DIN | Published On : 05th November 2022 12:00 AM | Last Updated : 05th November 2022 12:00 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை திருமணம் செய்தவா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பண்ருட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் சுந்தரமூா்த்தி. இவருக்கு, கடலூரைச் சோ்ந்த 16 வயது சிறுமியை மீனா என்பவா் கடந்த செப்.1-ஆம் தேதி கவரப்பட்டில் உள்ள விநாயகா் கோயிலில் திருமணம் செய்து வைத்தாராம். இதுகுறித்து அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய நலவாழ்வு அலுவலா் கே.ராணி அளித்த புகாரின்பேரில் சுந்தரமூா்த்தி, மீனா ஆகியோா் மீது பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.