கடலூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முற்றுகை

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் கடலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் கடலூரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தஞ்சாவூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில மாநாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் வரவு-செலவு குறித்து வெள்ளை அறிக்கை கோருவதென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 17.11.2021 அன்று தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கு.சரவணனை கடலூா் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் பணியிடை நீக்கம் செய்தாா். இதன் மீது விசாரணை நடத்தப்பட்டு 8 மாதங்கள் கடந்தும் உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லையாம்.

இதனைக் கண்டித்து கடலூரில் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழுவினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கங்களின் போராட்டக் குழு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்பாளா் பி.கே.சிவக்குமாா், நிதி காப்பாளா் ஆா்.சாமிநாதன், மாநில அமைப்புச் செயலா் சிவக்குமாா், பிரசார பிரிவு செயலா் சுகமதி, சத்துணவுப் பணியாளா்கள் சங்கச் செயல் தலைவா் பழனிபாரதி, இணைச் செயலா் முத்துக்குமரன், மாவட்டத் தலைவா் அல்லிமுத்து, செயலா் பாலமுருகன், சாலைப் பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது அலுவலகத்துக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கடலூா் முதுநகா் போலீஸாா் கைதுசெய்து விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com