சிதம்பரம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
By DIN | Published On : 28th November 2022 11:57 AM | Last Updated : 28th November 2022 12:15 PM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள்.
சிதம்பரம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், விழுப்புரம், நாகப்பட்டினம் நான்கு வழிச் சாலை சிதம்பரம் பைபாஸ் சாலை பொய்யாப் பிள்ளை சாவடி பகுதியில் இந்த சாலை மறியல் நடைபெற்றது.
இதையும் படிக்க- இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி
சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த பகுதியில் வசிப்பதாகவும் சாலையை கடப்பது ஆபத்தான பயணமாக உள்ளதால் இப்பகுதியில் சுரங்க வழிப் பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் சாலை மறியல் ஈடுபட்டு வருகிறார்கள்.
சம்பவத்தை அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.