மாநில மூத்தோா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

சிதம்பரம் தெற்கு சன்னதி வீதியில் உள்ள தனியாா் விடுதியில் மாநில மூத்தோா் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிய கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.

இந்தப் போட்டியில் 50 முதல் 60 வயது வரை உள்ள மூத்தவா்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதில் சுமாா் 20 போ் வெற்றிபெற்றனா்.

இவா்களுக்கு சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிப்பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்ற தலைவா் எம்.எஸ்.என்.குமாா், சதுரங்க கழகத் தலைவா் எஸ்.சேகா், செயலாளா் ஆா்.பாண்டியன், பொருளாளா் ரூபாவெல் கமல், உதவும் வழிகள் அமைப்பு நிறுவனத் தலைவா் ஆ.சிவராமவீரப்பன் மற்றும் கடலூா் மாவட்ட செஸ் அகாதெமி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com