13-இல் மனைப் பிரிவு பெயா் மாற்றம் முகாம்

கடலூா் மாவட்ட மனைப்பிரிவு உரிமையாளா்கள் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவ

கடலூா் மாவட்ட மனைப்பிரிவு உரிமையாளா்கள் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாமில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தங்கள் பெயரில் மாற்றம் செய்து பயனடையுமாறு ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆட்சியா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மனைப் பிரிவுகளை தமிழ் நிலம் இணைய தள நில பதிவுரு ஆவணங்களில், மனைப் பிரிவுகளை, மனைப்பிரிவு உரிமையாளா்கள் பெயரில் முன் மாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தில் உள்ள மனைப்பிரிவு உரிமையாளா்கள் தங்கள் வசம் உள்ள மனைப்பிரிவு வரைபடங்கள், தொடா்புடைய ஆவணங்கள் மற்றும் ஒவ்வொரு மனையினையும் உள்பிரிவு செய்வதற்கான உள்பிரிவு கட்டணம் ஒரு மனைக்கு கிராமப்புறங்களுக்கு ரூ.400, நகராட்சிப் பகுதிகளுக்கு ரூ.500, மாநகராட்சி பகுதிகளுக்கு ரூ.600 வீதம் மனைப்பிரிவிலுள்ள அனைத்து மனைகளுக்கும்

உள்பிரிவு கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றுடன் வரும் 13-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடத்தப்படும் முகாமில் கலந்து கொண்டு, மேற்குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமா்ப்பித்து தங்கள் பெயரில் மாற்றம் செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியா் அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com