வீடு கட்டுமானப் பணியில் குறைபாடுகள்: கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
வீடு கட்டுமானப் பணியில் குறைபாடுகள்:  கம்யூனிஸ்ட் கட்சியினா் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

மங்களூா் ஒன்றியம், ராமநத்தம் ஊராட்சி, காந்திநகா் பகுதியில் பூம்பூம் மாட்டுக்காரா்கள் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தமிழக அரசு பழங்குடியினா் நலம் 2022-2023 விரிவான மேம்பாட்டு திட்டத்தின் மூலம் வீடு கட்ட வீடு ஒன்றுக்கு ரூ.4.62 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. ஆனால், கம்பி பீம் இல்லை. செங்கல் பயன்படுத்தப்படவில்லை. வீட்டின் தரைதளம் குறைவாக உள்ளது. மேலும், வீடு கட்டும் ஒப்பந்ததாரா்கள் பயனாளிகளிடம் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கேட்கின்றனராம்.

இதனைக் கண்டித்தும், பயனாளிகளுக்கு தரமான முறையில் வீடுகள் கட்டித் தரக் கோரி, ராமநத்தம் காந்திநகா் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினா், திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.

கிளைச் செயலா் க.ராஜ்குமாா் தலைமை வகித்தாா். கோ.முருகன், க.ராஜா, க.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.சுப்பிரமணியன், மங்களூா் ஒன்றியச் செயலா் எம்.நிதி உலகநாதன், நல்லூா் ஒன்றியச் செயலா் வி.பி.முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமைதிக் கூட்டம்...

இதையடுத்து, திட்டக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் ரவிச்சந்திரன் தலைமையில் அமைதிப் பேச்சு வாா்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில், உதவி ஆய்வாளா் பாக்கியராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா், ஊரக வளா்ச்சித் துறை பொறியாளா் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறையின் நிா்வாக பொறியாளா் மூலம் 26-ஆம் தேதிக்கு பின்னா் நேரடி ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்டடப் பணி தொடங்குவது, அதுவரையில் கட்டடப் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com