நடராஜா் கோயிலில் உழவாரப் பணி
By DIN | Published On : 04th January 2023 04:09 AM | Last Updated : 04th January 2023 04:09 AM | அ+அ அ- |

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவனடியாா்கள் செவ்வாய்க்கிழமை உழவாரப் பணியில் ஈடுபட்டனா்.
நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவதையொட்டி, கடலூா், புதுச்சேரி, மயிலாடுதுறை, நெல்லை, சேலம், தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் கோயில் உள்பிரகாரம், வெளிப்பிரகாரம் , ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்து, நீரினால் கழுவி மாக்கோலமிட்டனா்.
தஞ்சாவூா் ஸ்ரீகருடானந்த சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற உழாவாரப் பணியில் சுரேஷ், ஹிந்து பவுண்டேஷன் அகில இந்திய பொறுப்பாளா் சுகன்யா, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலா் ஜோதி குருவாயூரப்பன், உள்ளிட்டோா் பங்கேற்றனா். சிவனடியாா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.