பொறுப்பேற்பு
By DIN | Published On : 13th January 2023 01:32 AM | Last Updated : 13th January 2023 01:32 AM | அ+அ அ- |

மோட்டுப்பள்ளி பிரசன்னகுமாா்
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக மோட்டுப்பள்ளி பிரசன்னகுமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
முன்னதாக இந்த நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த ராக்கேஷ்குமாா் கடந்த டிசம்பா் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, குஜராத் மாநில மின் சக்தி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பதவி வகித்து வந்த மோட்டுப்பள்ளி பிரசன்னகுமாா், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவா் தில்லி அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.