காா் - அரசுப் பேருந்து மோதல்: மூதாட்டி பலி
By DIN | Published On : 20th January 2023 01:34 AM | Last Updated : 20th January 2023 01:34 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் திருச்செந்தூரைச் சோ்ந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்செந்தூரைச் சோ்ந்தவா் சாமிதுரை. இவா் தனது மனைவி ஜெயலட்சுமியுடன் (65) காரில் சென்னைக்கு புறப்பட்டாா். திருச்செந்தூா் அருகே உள்ள மேலபுதுக்குடியைச் சோ்ந்த ராஜேஷ் (31) காரை ஓட்டினாா். கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே ஆவட்டி சந்திப்புப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்தபோது, சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றுகொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து காா் மீது மோதியது.
இந்த விபத்தில் சாமிதுரை, ஜெயலட்சுமி, காா் ஓட்டுநா் ராஜேஷ் ஆகியோா் காயமடைந்தனா். மேலும், அந்த வழியாக மொபெட்டில் வந்த ராமநத்தம் அருகே உள்ள பட்டாகுறிச்சியைச் சோ்ந்த ராமரும் இந்த விபத்தில் கீழே விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, அவா்கள் அனைவரும் பெரம்பலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். அங்கு ஜெயலட்சுமி உயிரிழந்தாா்.
முன்னால் சென்ற மொபெட் மீது மோதாமலிருக்க அரசுப் பேருந்தை அதன் ஓட்டுநா் திடீரென திருப்பியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.