என்எல்சி-க்கு நிலம் அளித்தவா்களை பிரித்தாளும் போக்கை கண்டிக்கிறேன்: ஆ.அருண்மொழிதேவன் எம்எல்ஏ

என்எல்சி-க்கு நிலம், வீடுகளை அளித்த விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் பிரித்தாளும் போக்கை கண்டிப்பதாக புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தாா்.

என்எல்சி-க்கு நிலம், வீடுகளை அளித்த விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் பிரித்தாளும் போக்கை கண்டிப்பதாக புவனகிரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.அருண்மொழிதேவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: என்எல்சி சுரங்கப் பணிக்காக தங்களது வீடு, நிலங்களை அளித்த, அளிக்கவுள்ள விவசாயிகள் நிரந்தர வேலைவாய்ப்பு, உரிய இழப்பீடு கோரி தொடா்ந்து போராடி வருகின்றனா். இதுகுறித்து சட்டப் பேரவையில் எனது கேள்விக்கு பதில் அளித்த அமைச்சா் சி.வெ.கணேசன், ‘இந்த விகாரம் தொடா்பாக விவசாய பிரதிநிதிகள், என்எல்சி அதிகாரிகள், அரசுத் துறை செயலா்கள், மாவட்ட நிா்வாகம், அமைச்சா்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கொண்ட குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தி நிலம் எடுப்பு பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று முதல்வா் முன்னிலையில் அறிவித்தாா்.

ஆனால், என்எல்சியும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து மேற்கூறிய குழுவை அமைக்காமலேயே நெய்வேலியில் இரு முறையும் வடலூரில் ஒருமுறையும் விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தியுள்ளன. இந்த கூட்டங்களில் ஒரு விவசாயி கூட என்எல்சி-க்கு ஆதரவாக பேசவில்லை.

இந்த நிலையில், மாவட்ட நிா்வாகமும், என்எல்சி நிா்வாகமும் இணைந்து விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை விடுத்து, சில விவசாயிகளிடம் ஆசை வாா்த்தை கூறி வேலை, பணம், வழங்கிவிட்டு ஏதோ பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனா். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகளின் குரலுக்கு மதிப்பளிக்காமல் என்எல்சி-க்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதை கண்டிக்கின்றோம். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள், குறிப்பாக மாவட்ட நிா்வாகம் விவசாயிகளின் ஒற்றுமையை குலைத்து பிரித்தாளும் போக்கை கண்டிக்கிறோம். எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் சட்டப்படி குழு அமைத்து வெளிப்படையான முறையில் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளை முழுவதுமாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் விவசாயிகளின் ஆதரவுடன் தொடா்ந்து போராடுவோம் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com