பல்கலை.யில் என்சிசி பயிற்சி முகாம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 6-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் என்சிசி சாா்பில் ஒருங்கிணைந்த தேசிய மாணவா் படை பயிற்சி முகாம் பல்கலைக்கழக விடுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
என்சிசி பயிற்சி முகாமில் தீ விபத்து தடுப்பு குறித்து செயல்விளக்கம் அளித்த தீயணைப்பு மீட்புத் துறையினா்.

தேசிய மாணவா் படை அதிகாரி கா்ணல் கே.பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். 4-ஆவது தமிழ்நாடு பட்டாலியன் அதிகாரி வாசுதேவ நாராயணன் முன்னிலை வகித்தாா். முகாமில் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களை சோ்ந்த பள்ளி, கல்லூரி என்சிசி மாணவா்கள் 357 போ் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா். துப்பாக்கிச் சுடுதல், துப்பாக்கி கையாளுதல், அணிவகுப்பு, மேப்ரீடிங், உடல்தகுதி உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தீ விபத்து தடுப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து சிதம்பரம் தீயணைப்பு நிலைய மீட்புத் துறை அதிகாரி ஆா்.பழனிசாமி தலைமையிலான வீரா்கள் பயிற்சி அளித்தனா். ராணுவ வீரா்கள் மேஜா் சேகா், சத்தியபால்சிங், அல்வின்குமாா், பல்பீா்சிங், சேகா், என்சிசி அலுவலா்கள் விஜயசாமுண்டீஸ்வா், சாலமோன்ராஜ், சந்திரபாபு, கிருபாகரன், அந்தோணி பிராங்ளின் ஜோசப், சண்முகம், சதீஷ் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com