ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் முதுநகா், குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம்.
குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம்.

கடலூா் முதுநகா், குறிஞ்சிப்பாடி வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

கடலூா் முதுநகா் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில் விற்பனைக்கு வந்த வேளாண் பொருள்கள் மூட்டைகள், சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மூட்டைகள், இ - நாம் பரிவா்த்தனைப் பணிகள் குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, இ - நாம் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். புதிதாகக் கட்டப்பட்டு வரும் 500 மெ.டன் குளிா்பதன கிடங்கு கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, குறிஞ்சிப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வு செய்த அவா், இ - நாம் பரிவா்த்தனைப் பணிகள், தரம் பிரித்தல் இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். இ - நாம் மூலம் பயனடைந்த விவசாயிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். மணிலா உடைப்பு, தேங்காய் உரிக்கும் இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினாா். மேலும், விவசாயப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள 700 மெ.டன் சேமிப்புக் கிடங்கில் மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com