Enable Javscript for better performance
கடலூா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,198 வழக்குகளில் ரூ.10.94 கோடிக்குத் தீா்வு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    கடலூா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,198 வழக்குகளில் ரூ.10.94 கோடிக்குத் தீா்வு

    By DIN  |   Published On : 10th September 2023 01:37 AM  |   Last Updated : 10th September 2023 01:37 AM  |  அ+அ அ-  |  

    9prtp2_0909chn_107_7

    கடலூரில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணப்பட்ட வழக்கில் தீா்ப்பாணை பெறும் மாற்றுத்திறனாளி பெண்.

     

    கடலூா் மாவட்டத்தில் கடலூா், சிதம்பரம் உள்ளிட்ட 13 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 1,198 வழக்குகளில் ரூ.10.94 கோடிக்குத் தீா்வு காணப்பட்டு, அதற்கான ஆணைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.

    கடலூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு முதன்மை நீதிபதி (பொ) உத்தமராஜ் தலைமை வகித்தாா்.

    மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்-1 நீதிபதி ஆனந்தன், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண்-2 நீதிபதி பிரகாஷ், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலா் பிரபாகா், கூடுதல் சாா்பு நீதிமன்றம்-2 நீதிபதி அன்வா் சதாத், மோட்டாா் வாகன விபத்து சிறப்பு சாா்பு நீதிமன்ற நீதிபதி சுதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் வனஜா, ரகோத்தமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    கடலூா் மாவட்ட நீதிமன்ற பாா் அசோசியேஷன் தலைவா் பாலகிருஷ்ணன், லாயா்ஸ் அசோசியேஷன் செயலா் சிவசிதம்பரம் மற்றும் வழக்குரைஞா்கள், காவல் அதிகாரிகள், நீதி மன்ற ஊழியா்கள் பங்கேற்றனா்.

    இதில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

    கடலூா், விருத்தாசலம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி மற்றும் காட்டுமன்னாா்கோவில் நீதிமன்றங்களில் அந்தந்த நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றன.

    13 அமா்வுகள் மூலம் சுமாா் 3,885 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 1,198 வழக்குகள் ரூ.10,94,28,249-க்கு தீா்வு காணப்பட்டு உத்தரவு ஆணைகள் வழங்கப்பட்டன.

    சிதம்பரத்தில்... : சிதம்பரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சாா்பில் தேசிய மக்கள் நீதிமன்றம், நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடிப்பதற்காக ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

    இந்த சிறப்பு அமா்வுக்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராமகிருஷ்ணன், வட்ட சட்டப் பணிகள் குழு தலைவா் மற்றும் சாா்பு நீதிபதி அ.உமாமகேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா். கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதித் துறை நடுவா் சுகன்யா ஸ்ரீ, குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-1 தாரணி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் எண்-2 சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 269 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக ரூ.1,39,71,758 வழங்கப்பட்டது.

    சிதம்பரம் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மோகனசுந்தரம் மற்றும் சிதம்பரம் வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

     

    முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
    தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp