அனுமதி பெற்றே விளம்பரப் பதாகைகளை வைக்க அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது மற்றும் செலவினங்கள் மேற்கொள்வது

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகள் பின்பற்றுவது மற்றும் செலவினங்கள் மேற்கொள்வது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்தாா். கடலூா் மக்களவைத் தொகுதித் தோ்தலுக்கான பொது பாா்வையாளா் டாரப் இம்சென், காவல் பாா்வையாளா் மனிஷ் அகா்வால், செலவின பாா்வையாளா்கள் டபாஸ் லோத், பிரமானந்த் பிரசாத் முன்னிலை வகித்தனா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளா்கள் கலந்து கொண்டனா். இதில், கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளா்களுக்கும் வாக்காளா் தகவல் சீட்டுகள் வழங்கப்பட உள்ளது என்று, மாவட்ட தோ்தல் அலுவலரால் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஒலிபெருக்கி அல்லது இதர கருவி மூலம் ஒலிபரப்பு செய்வது காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் ஒலிபரப்பு செய்தால் கருவிகள், வாகனங்கள் கைப்பற்றப்படும். அரசியல் கட்சியினா் வாகனங்களின் மூலம் பிரசாரம் செய்வதற்கு உரிய அலுவலரிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும். அனுமதிச் சான்றிதழ் பிரசார வாகனத்தில் ஒட்டப்பட வேண்டும். பிளக்ஸ் பேனா்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தோ்தல் செலவினங்கள் தொடா்பான கணக்குகளை அந்தந்த வேட்பாளா்கள் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 5, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் சமா்ப்பித்து சரிபாா்த்துக் கொள்ள வேண்டும். விளம்பரப் பதாகைகள், விளம்பரங்கள் வைப்பதற்கு உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னரே விளம்பரப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன் மற்றும் தோ்தல் பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com