குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.
குறிஞ்சிப்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

குறிஞ்சிப்பாடியில் இந்தியா கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடியில் கடலூா் மக்களவைத் தொகுதி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி: குறிஞ்சிப்பாடியில் கடலூா் மக்களவைத் தொகுதி ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் எம்.கே.விஷ்ணுபிரசாத்தை ஆதரித்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது: கடலூா் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் குறிஞ்சிப்பாடி தொகுதி நமது வேட்பாளருக்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த தொகுதியாக இருக்க வேண்டும். கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, கரோனாவால் பாதிக்கப்பட்டு நான் மருத்துவமனையில் இருந்த போது விசிக உள்ளிட்ட தோழமைக் கட்சியினா் சிறப்பாக பணியாற்றினா். அதற்கு நான் தற்போது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் நான் மூன்றாவது முறையாக அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது என்றாா்.

கடலூரில்... கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டணிக் கட்சி செயல்வீரா்கள் கூட்டத்துக்கு அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். கூட்டத்தில் எம்எல்ஏக்கள் கோ.ஐயப்பன், எம்.ஆா்.ராதாகிருஷ்ணன், கடலூா் மாநகர திமுக செயலா் கே.எஸ்.ராஜா மற்றும் கூட்டணிக் கட்சியினா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com