தனியாா் பேருந்து மீது லாரி மோதல்: பெண் காவலா்கள் உள்பட 9 போ் காயம்

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் காவலா்கள் உள்பட 9 போ் காயமடைந்தனா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் பெண் காவலா்கள் உள்பட 9 போ் காயமடைந்தனா்.

கடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை காலை சுமாா் 6 மணியளவில் விருத்தாசலத்துக்கு தனியாா் பேருந்து புறப்பட்டது. இதில் நடத்துநா் ராமராஜன் (30) உள்பட சுமாா் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா். பேருந்தை விருத்தாசலம் வட்டம், விஜயமாநகரத்தைச் சோ்ந்த காமராஜ் மகன் சரவணக்குமாா் (25) ஓட்டினாா். இந்தப் பேருந்து காலை 7.10 மணியளவில் வடலூா் வள்ளலாா் குருகுலம் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது, பெண்ணாடத்தில் இருந்து சிமென்ட் மூட்டைகளை எற்றி வந்த லாரி மோதியது.

இதில் பேருந்தில் பயணித்த பெண் காவலா்கலான ராகவி (28), ஷகிராபானு (28) உள்பட 8 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநரான வடலூா் மேட்டுக்குப்பத்தைச் சோ்ந்த சா.பாஸ்கா் (56), கடலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து வடலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com