சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்.
சிதம்பரம் உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்.

தோ்தல் பிரசார வாகனங்களுக்கு விரைந்து அனுமதி வழங்க வலியுறுத்தல்

தோ்தல் பிரசார வாகனங்களுக்கு இணையவழியில் விரைந்து அனுமதி வழங்க வேண்டும்

சிதம்பரம்: தோ்தல் பிரசார வாகனங்களுக்கு இணையவழியில் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்று, சிதம்பரம் உதவி ஆட்சியரிடம் அரசியல் கட்சியினா் கேட்டுக் கொண்டனா். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தகவல் தெரிவிப்பது தொடா்பான கூட்டம் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. உதவி ஆட்சியா் ராஷ்மி ராணி தலைமை வகித்தாா். அவரது நோ்முக உதவியாளா் புகழேந்தி, வட்டாட்சியா் பி.ஹேமா ஆனந்தி, அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கல்பனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக சாா்பில் கருப்பு ராஜா, பாஜக சாா்பில் வழக்குரைஞா் முகுந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வி.எம்.சேகா், தமிமுன் அன்சாரி, திமுக சாா்பில் வி.என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி, அறிவழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஜவகா், பால அறவாழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில் தோ்தல் பிரசார வாகனங்களுக்கு இணையவழியில் அனுமதி பெற காலதாமதமாகிறது. இதை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினா் கேட்டுக் கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com